#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
4 வயது மூத்த பிரபல சீரியல் நடிகையை மணக்கும் பசங்க பட சிறுவன் நடிகர்!! யார்னு பார்த்தீங்களா!!
கடந்த 2009 ஆம் ஆண்டு சசிகுமார் தயாரிப்பில், இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் பசங்க. பள்ளி குழந்தைகளை மையமாக கொண்டு உருவான இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. இந்தப் படத்தில் அன்புக்கரசு என்ற கதாபாத்திரத்தில் சிறுவனாக நடித்தவர் கிஷோர்.
இந்தப் படத்திற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள கிஷோர் தற்போது நன்கு வளர்ந்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான ப்ரீத்தியை காதலிப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய ப்ரீத்திக்கு வாழ்த்து கூறி கிஷோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அச்சோமா, உன்னை திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருக்கிறேன். அடுத்த வருடம் பிறந்தநாள் உட்பட அனைத்து விழாக்களையும் நிச்சயம் இருவரும் கணவன், மனைவியாக கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.
ஆபிஸ் சீரியலின் மூலம் அறிமுகமான ப்ரீத்தி லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். ப்ரீத்தி கிஷோரை விட நான்கு வயது மூத்தவர் எனவும் கூறப்படுகிறது. ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.