வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
#BREAKING : நடிகர் விஜய் மீது போலிஸில் புகார்.. வாக்குச்சாவடியில் அத்துமீறல்.?!
18 ஆவது மக்களவைத் தேர்தல் நேற்று ஒரே கட்டமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நடைபெற்றது. நேற்று காலை 7 மணி முதல் துவங்கிய வாக்குப்பதிவு மாலை வரை நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் வாக்களிக்க திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர். அந்த வரிசையில் பிரபல நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரை பகுதியிலுள்ள வாக்கு சாவடியில் வாக்களிக்க சென்றார்.
அவர் வாக்களிக்க வருவார். அவரை காணலாம் என்று காலை முதல் ரசிகர்கள் கூட்டம் வாக்குச்சாவடிக்கு அருகிலும், விஜயின் வீட்டிற்கு அருகிலும் அலைமோதி கொண்டிருந்தது. விஜய் வீட்டிலிருந்து வெளியேறி வாக்கு சாவடிக்கு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து ரசிகர் கூட்டமும் சென்றது. இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் விஜய் வாக்கு சாவடிக்குள் சென்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர் விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கூட்டத்துடன் தேர்தல் விதிமுறைகளை மீறி அவர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்ததாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.