#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் மதுமிதா இப்படிப்பட்ட மோசமான காரியத்தையா செய்தார்.! போலீசில் புகார் அளித்த பிரபல தொலைக்காட்சி!!
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் மூன்று ஆரம்பத்தில் இருந்தே சண்டை, சர்ச்சைகளுடன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்ஷி ஆகியோர் கடந்த நாட்களில் வெளியானர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் விருந்தினராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வந்ததுமே பல பிரச்சினைகள் வெடித்து வீடே களேபரமானது. இந்நிலையில் கடந்த வாரம் அபிராமி குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறியநிலையில், தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் என்பவர் மதுமிதா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால், காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவருக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மதுமிதா ஒப்பந்தத்தின்படி11,50,௦௦௦ பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து ஒரு நாளைக்கு 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை தருவதாக கூறிஇருந்தோம். ஆனால் அதனை முதலில் ஒப்புக் கொண்டு சென்றவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பாக்கி பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார் என கூறியுள்ளார்.