இதை எதிர்த்து குரல் கொடுங்க! மரக்கன்று நட்ட நடிகர் விஜய்க்கு அரசியல் பிரபலம் விடுத்த அதிரடி கோரிக்கை!
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகரான மகேஷ் பாபு சமீபத்தில் தனது 45 வது பிறந்தநாளைமுன்னிட்டு #GreenIndiaChallenge என்ற சவாலை நடிகர் விஜய், ஜூனியர் என்.டி.ஆர், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டார்.
மேலும் அந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஜய், அதில் இது உங்களுக்காக மகேஷ் பாபு. பசுமை இந்தியாவுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலானது. பலரும் இதற்கு பாராட்டு தெரிவித்தனர்.
#மரம் நடுவது நற்செயல். @actorvijay அதைச் செய்வது சிறப்பு. அதே வேளை, இயற்கையாக வளர்ந்த வனங்களையும், நாம் நடும் மரங்களையும் பாதுகாப்பது முக்கியம்.
— Aloor Sha Navas (@aloor_ShaNavas) August 11, 2020
வளர்ச்சியின் பெயரால் வளங்களை அழிக்க வகை செய்யும் #EIA2020 யை எதிர்த்து #விஜய் குரல் எழுப்ப வேண்டும்.#ScrapEIA2020 #TNRejectsEIA2020 https://t.co/hexSv8R0VE
இந்நிலையில் விஜய்யின் ட்விட்டர் பதிவைக் குறிப்பிட்டு விசிக துணை பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மரம் நடுவது நற்செயல். அதைச் செய்வது சிறப்பு. அதே வேளை, இயற்கையாக வளர்ந்த வனங்களையும், நாம் நடும் மரங்களையும் பாதுகாப்பது முக்கியம். வளர்ச்சியின் பெயரால் வளங்களை அழிக்க வகை செய்யும் EIA2020-யை எதிர்த்து விஜய் குரல் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.