#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல நடிகர் பிரபாஸை விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்த பெண் - வைரலாகும் வீடியோ!
பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு இவரது கம்பீரமான நடிப்பும் ஒரு முக்கிய கரணம் என்றே சொல்லலாம். பாகுபலி 1 , பாகுபலி 2 என இவரது நடிப்பில் வெளியான இரண்டு பாகங்களும் உலகளவில் மாபெரும் வெற்றிபெற்றது.
பாகுபலி படத்தை அடுத்து பிரபாஸ் எந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சகோ என்ற படத்தில் பிசியாக நடித்துவருகிறார் பிரபாஸ்.
நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்திற்கு வந்த நடிகர் பிரபாஸை அடையாளம் கண்ட அவரது பெண் ரசிகர் ஒருவர் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார். மேலும் பிரபாஸுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அந்த பெண் இறுதியாக பிரபாஸின் கன்னத்தில் செல்லமாக அறைந்துவிட்டு செல்கிறார்.
அந்த பெண் செல்லமாக தட்டியிருந்தாலும் பிரபாஸ் சில நிமிடங்கள் தன் கன்னத்தில் கைவைத்திருந்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.