#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தோளில் ட்ராகன் குட்டி, பார்ப்பதற்கே வித்தியாசமான தோற்றத்தில் சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட புகைப்படம்! மிரண்டுபோன ரசிகர்கள்!
பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பிரகதி. இந்த நிகழ்ச்சியில் அவர் தனது திறமையால் இரண்டாவது பரிசை வென்றார். பின்னர் அவர் தொடர்ந்து சங்கீதம் கற்று வந்தநிலையில் 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஜூனியருக்கான பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல் பரிசையும் தட்டிச் சென்றார்.
மேலும் அவர் உலகளவில் நடைபெற்று வரும் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.தொடர்ந்து ப்ரகதிக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி அவர் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் பிரகதி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில், வயதானவர் போல மேக்கப் போட்டு தோளில் டிராகன் இருப்பது போல புகைப்படம் எடுத்துள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.