#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
செம கடுப்பில் கொந்தளித்துப்போன நடிகை ப்ரியா பவானி ஷங்கர்! காரணம் தெரிஞ்சா நீங்களே ஷாக்காகிருவீங்க!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். இளைஞர்களையும் டிவி சீரியல் பார்க்க வைத்ததில் அம்மணிக்கு முக்கிய பங்கு உண்டு. இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளைஞர்கள் ஏராளம்.
ஒருகட்டத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ப்ரியா தான் நடித்த டிவி சீரியலை விட்டுவிட்டு வெள்ளித்திரை பக்கம் சென்றார். மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், அதர்வாவிற்கு ஜோடியாக குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்தார்.
பிரியா பவானி சங்கர் பெயரில் ட்விட்டரில் பல போலி அக்கவுண்ட்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது பெயரில் உள்ள அக்கவுண்ட் ஒன்றில் இருந்து நிரந்தர பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
இதனை கண்ட ,பிரியா பவானி சங்கர் அப்படியே நரேந்திர மோடிக்கும் ட்விட்டர் கணக்கு உருவாக்கி, பிரதம அமைச்சராக பதிவுகளை வெளியிடலாமே..போலி கணக்கு வச்சுருக்க உனக்கு எதுக்குடா இவ்வளவு எமோஷன் என கோபமாக பதிவிட்டுள்ளார்.
Apdiae @narendramodi kum oru account create pannita prime minister madriae tweet potralamey 🙄 fake account ku edhuku da ivlo emotion! #annoying own your opinion instead of driving it over others https://t.co/eWTB5yDneB
— Priya BhavaniShankar (@priya_Bshankar) 24 May 2019