#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல நடிகருடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்! சந்தோஷத்தில் ரசிகர்கள்!
பிரியா பவானி சங்கர் இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர். மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான கடாரம் கொண்டான் படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மேயாத மான் படம் மூலம் அறிமுகமான பிரியா முதன்முதலாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகளுக்கு இடையே, விக்ரமுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.
இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட போது 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. விஜய்,அஜித்தின் புதிய படம் வெளியாகவுள்ளதால், பட வெளியீட்டை ஆகஸ்ட் 2020-க்கு மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளது.