அம்மணிக்கு அடிச்சது லக்கு!! யாரும் எதிர்பாராத முன்னணி ஹீரோவுடன் ஜோடி சேரும் ப்ரியா பவானி சங்கர்!! யார் தெரியுமா அது?



Priya Bhavani sankar pair with Jayam ravi

ஜெயம் ரவி நடிக்கும் புது படம் ஒன்றில், அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். இவர் தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகிவரும் 'பொன்னியின் செல்வன்’ படத்திலும், அகமத் இயக்கும் ‘ஜன கன மன’ என்ற படத்திலும் நடித்துவருகிறார்.

Jayam ravi

இந்நிலையில் பூலோகம் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்க இருக்கும் புது படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் ஜெயம் ரவி. இந்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.