அட.. நடிகர் பாக்யராஜின் தாவணி கனவுகள் படத்தில் நடித்த இந்த துறுதுறு குட்டி பாப்பா யாருனு தெரியுதா? ஷாக்கான ரசிகர்கள்!!



priyadharsini-acted-as-child-artist-in-thavani-kanavuka

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தொகுப்பாளினி டிடி. இவரது அக்கா  ப்ரியதர்ஷினி. இவரும் பல தொலைக்காட்சிகளிலும் எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

 மேலும் கலைஞர் டிவி யில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட  நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியாளராகவும் ஆனார். மேலும் இவர் ஏராளமான தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிரியதர்ஷினி குழந்தை நட்சத்திரமாக பல பிரபலங்களின் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்து ஹிட்டான திரைப்படம் தாவணிக்கனவுகள்.

priyadharsini4 தங்கைகளை கொண்ட ஒரு அண்ணன் அவர்களை எவ்வாறு கரைசேர்க்கிறார் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் கடைசி தங்கையாக, துருதுருவென்று குட்டி பெண்ணாக சிறுமி ஒருவர் நடித்திருப்பார். அவர் வேறு யாருமல்ல. டிடியின் அக்கா பிரியதர்ஷினிதான். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.