கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கணவன் - மனைவி சண்டையால் விரக்தி; இரயில் முன் பாய்ந்து இளைஞர் மரணம்?.. சடலமாக மீட்கப்பட்ட உடல்.!
புதுக்கோட்டை மாநகராட்சியில் உள்ள அம்பாள்புரம் பகுதியில் வசித்து வருபவர் அருண். இவர் புகைப்பட கலைஞராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். இதனிடையே, கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக மனக்கசப்பு நிலவி வந்ததாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: 16 வயது மகளை தாய்மாமனுக்கு திருமணம் செய்ய வைக்க ஏற்பாடு; இரயில் முன் பாய்ந்து உயிரைவிட்ட சிறுமி.!
தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்
இதனால் அருண் ஏற்கனவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த செப்.10ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் மாயமானார்.
இதனிடையே, அவர் நேற்று பாலநகர் இரயில் நிலைய தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: அத்தை மக எனக்கு வேண்டாம்?.. பெற்றோரின் வற்புறுத்தலால் மருத்துவ மாணவர் தற்கொலை?.. சென்னையில் சோகம்.!