#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இப்படி பண்ணீட்டீங்களே.. குவிந்து வரும் பட வாய்ப்புகள்! குக் வித் கோமாளி புகழ் எடுத்த அதிரடி முடிவு! செம ஷாக்கான ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது காமெடியான பேச்சால், செயலால் ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அதைத்தொடர்ந்து புகழ் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
மேலும் புகழின் உச்சிக்கே சென்ற புகழுக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்தது. அவர் தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. மேலும் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திலும், சந்தானம் படத்திலும், மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகவிருக்கும் காசேதான் கடவுள் பட ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
Valimai ooda ungala sandhikren pic.twitter.com/IDTyRRvgyE
— Pugazh (@pugazh_iam) July 25, 2021
இதற்கிடையில் புகழ் விஜய் டிவி காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் தற்போது படங்களின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு அவர் பிஸியான நிலையில் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து வெளியிட்ட வீடியோவில் அவர், கண்டிப்பாக சீக்கிரமாக வந்து கலந்து கொள்வேன். ஒரு சின்ன இடைவெளி தான். படம் முடிந்தவுடன் வந்துவிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் புகழ் குக் வித் கோமாளி சீசன் 3ல் கலந்து கொள்ள வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டு வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.