மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயிறு வலியால் துடி துடித்த சிறுமி! பெற்றோருக்கும், மருத்துவர்களும் காத்திருந்த அதிர்ச்சி!
நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட வருகிறது. குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்த செய்திகள் அதிகமாக வந்துகொண்டே உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் 4 வயது பள்ளி சிறுமி ஒருவரை பள்ளியில் வேலை செய்யும் உதவியாளர் ஒருவர் பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட அந்த சிறுமியின் பெற்றோர், பெற்றோர் - டீச்சர்ஸ் மீட்டிங்கிற்காக பள்ளிக்கு வந்துள்ளனர். அந்த சமயம் தனது பெற்றோருக்காக காத்திருந்த சிறுமியை தனி அறைக்கு அழைத்துச்சென்று 24 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இதுப்பற்றி ஏதும் அறியாத சிறுமியின் பெற்றோர் தனது மகளை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பின்னர் கடந்த சனிக்கிழமை தனக்கு வயிறு வலிப்பதாக சிறுமி கூறியுள்ளார். இதனை சாதாரணமா பெற்றோர் எடுத்துக்கொள்ள, ஞாயிறு அன்று மூடும் தனக்கு வயிறு வலிப்பதாக சிறுமி கூறியதை அடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்த பட்டிருப்பதை உறுதி செய்தனர். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குறிப்பிட்ட பள்ளி உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெற்றும் பரபரப்பை ஏற்படுத்தியது.