அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் பெய்யப்போகும் பேய்மழை; மஞ்சள் & ஆரஞ்சு எச்சரிக்கை..!
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு அதிக கனமழைக்கான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. நேற்று முதலாகவே தமிழ்நாடு முழுவதும் பரவலான இடங்களில் திடீர் கனமழை மற்றும் சூறைக்காற்று மழை பெய்து வருகிறது.
17 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை
இந்நிலையில், இன்று இரவு 7 மணிமுதல் 10 மணி வரையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BigBreaking: 14 மாவட்டத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகும் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
13 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை
எஞ்சிய திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், புதுக்கோட்டை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு, இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேலூர் மாவட்டத்தை குளிர்வித்த ஆலங்கட்டி மழை; மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!