மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த மாதிரி படத்தை வெளியிடமாட்டோம்! மறுத்த திரையரங்குகள்.! கடும்கோபத்தில் கொதித்தெழுந்த பிரபல இயக்குனர்!!
தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் படங்களை இயக்கி பிரபலமாக இருப்பவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ரத்த சரித்திரம்’ படத்தை இயக்கியுள்ளார். மேலும் அடிக்கடி அடல்ட்ஸ் ஒன்லி படங்களை வெளியிட்டு சர்ச்சை இயக்குனர்களில் ஒருவராக விளங்கிவரும் அவர் தற்போது டேஞ்சரஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர் படமான இதில் நைனா கங்குலி, அப்சரா ராணி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படம் தமிழில் 'காதல் காதல்தான்' என்ற பெயரில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தில் எக்கசக்கமான ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் படத்தை திரையிட மாட்டோம் என மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் ராம் கோபால் வர்மா, சில திரையரங்குகள் இப்படத்தை லெஸ்பியன் படம் என கூறி திரையிட மறுக்கிறது. இந்திய சினிமாவில் ஆண்,பெண் காதலிப்பதாக நூற்றுக்கணக்கான படங்கள் வெளியானது. அதே போலதான் நான் பெண்ணும் பெண்ணும் காதலிப்பது போன்று படம் எடுத்தேன். உச்சநீதிமன்றமே ஓரினச் சேர்க்கை திருமணம் குறித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆண், பெண் முத்தமிடுவது எப்படி சகஜமோ அவ்வாறு பெண்ணும் பெண்ணும் முத்தமிடுவதும் சகஜம். எனவேதான் என் படத்தில் அப்படியொரு காட்சியை வைத்தேன். ஆனால் இதனை ஆபாச சினிமா என கூறி திரையரங்குகள் திரையிட மறுப்பு தெரிவிக்கின்றனர். அதனால் படத்தை வெளியிட முடியவில்லை. விரைவில் படம் ரிலீசாவதற்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.