வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
ப்பா.. வேற லெவல்தான்..! தலைகீழாக, உடலை வில்லாக வளைத்து மாஸ் காட்டும் ரம்யா பாண்டியன்.! வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, பின் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
பின்னர் ரம்யா பாண்டியன் சூர்யாவின் தயாரிப்பில் ராமே ஆண்டாளும் ராவண ஆண்டாளும் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது நடிகை ரம்யா பாண்டியனுக்கு தற்போது பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் அவர் கிளாமரில் தாறுமாறு காட்டி போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி அவர் யோகா மற்றும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தலைகீழாக, உடலை வில்லாக வளைத்து யோகா செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.