#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் ராணாவை திருமணம் செய்ய தயார்.! காதலியை அறிமுகப்படுத்திய ராணா!குவியும் வாழ்த்துகள்..!
தெலுங்கு சினிமாவில் கடந்த 2010 ஆம் வெளியான லீடர் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராணா. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது பாகுபலி திரைப்படம். அந்த ஒரு படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.
இவர் தமிழில் ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்ற மூன்று மொழிகளில் ஏப்ரல் மாதம் வெளியாகயிருந்தது.
ஆனால் தற்போது நாடு முழுவதும் கொரோனா எதிரொலியால் படம் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடிகர் ராணா தனது காதலி தனது காதலை ஏற்றுகொண்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறி தனது வருங்கால துணையை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது அப்புகைப்படம் வைரலாகவே ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.