மாப்பிள்ளை ரெடி!! செம ஹேப்பியாக துவங்கிய ராணாவின் திருமண கொண்டாட்டங்கள்! வைரலாகும் செம கியூட் புகைப்படம்!



rana-marriage-photo-viral-8FCD5Y

 பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ராணா. இவர் தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

ராணா  ஹைதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் சமீபத்தில்தான்  இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

rana

அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் ராணா  குடும்பத்தாருக்கு சொந்தமான ராமநாயுடு ஸ்டூடியோவில் இன்று  திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் இருந்தே திருமண கொண்டாட்டங்கள் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று திருமண கொண்டாட்டம் துவங்கியுள்ள நிலையில் ராணா தன்னுடைய அப்பா மற்றும் நடிகர் வெங்கடேஷ் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நான் ரெடி என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் திரைப்பட பிரபலங்கள்,ரசிகர்கள் பலரும் ராணா- மீஹீகா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.