#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என் காதலுக்கு ஓகே சொல்லிட்டாங்க.. ஒருவழியாக தனது காதலை போட்டுடைத்த பாகுபலி ராணா! வைரலாகும் புகைப்படம்!
கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பாகுபலி படத்தில் பல்லால்தேவனாக வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ராணா. இவர் இப்படத்தில் தனது உடலை ஏற்றி கட்டுக் கோப்பான உடலமைப்புடன் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.
மேலும் கதாநாயகனாக நடித்த பிரபாஸ்க்கு சமமாக ராணாவிற்கும் இப்படத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் நடிகர் ராணா தனது காதல் குறித்து முதன்முறையாக தனது சமூகவலைத்தளபக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் காதலி மிஹீகாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு . தன்னுடைய காதலுக்கு அவர் ஓகே சொல்லிவிட்டதாக கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து அவருக்கு நண்பர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர். மும்பையை பூர்வீகமாக கொண்ட மீஹீகா பஜாஜ் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்துள்ளார். மேலும் அவர் ஈவென்ட்மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த அழகிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.