#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தெறி தெலுங்கு ரீமேக்கில் விஜய்யாக நடிக்கப்போவது இந்த நடிகரா? உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அட்லீயின் கூட்டணியில் முதலில் உருவான படம் தெறி. இதில் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, மொட்டை ராஜேந்திரன், பேபி நைனிகா என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில் தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. இதில் விஜய் கதாபாத்திரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ரவி தேஜா நடிக்கவுள்ளார்.
மேலும் அவருக்கு ஜோடியாக எமிஜாக்ஸன் கதாபாத்திரத்தில் கேத்ரின் தெரசா நடிக்கவுள்ளார். மேலும் சமந்தா கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெறும் நிலையில் றெமக்கிற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.