மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் சயின்ஸ் பிக்சன்ஸ் கதையில் சூர்யா.. அடடே இயக்குனர் இவரா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். என்ன திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்தத் திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்தியா முழுவதும் சுமார் 10 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு என்ற திரைப்படத்திலும், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இதனிடையே பாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், 3 ஆண்டுகளுக்கு முன்பே இன்று நேற்று நாளை மற்றும் அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் புதிய படத்திற்கான கதையை சூர்யாவிடம் கொடுத்ததாகவும், அந்த கதை சூர்யாவுக்கு பிடித்துப்போனதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தற்போது சென்னையில் அவருக்கு சொந்தமான இடத்தில் இயக்குனர் ரவிக்குமாருக்கு அலுவலகம் அமைத்துக் கொடுத்து இப்படத்தின் சிஜி உள்ளிட்ட பணிகளை ஆரம்பிக்கும்படி கூறியுள்ளதாகவும், சூர்யா தன்னுடைய மற்ற படங்களை முடித்துவிட்டு வந்து இந்த படத்தில் இணைய திட்டமிட்டுள்ளதாக கதகவல் வெளியாகியுள்ளது.