#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து விலக இதுதான் காரணமா? ரகசியத்தை உடைத்த விஜே தீபிகா! ரசிகர்கள் ஷாக்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, குமரன் மற்றும் காவியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்தத் தொடரில் கடைக்குட்டி பையனான கண்ணன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்து வந்தவர் விஜே தீபிகா. இந்த நிலையில் தற்போது அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடிக்கிறார். இந்த மாற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திடீரென சீரியலை விட்டு விலகியது ஏன் என தீபிகாவிடம் ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதற்கு அவரது முகத்தில் ஏற்கனவே முகப்பரு அலர்ஜி இருந்ததாம். ஷூட்டிங்கிற்காக மேக்கப் போட போட அது அதிகமாகி கொண்டே வந்துள்ளது. இந்நிலையில் மருத்துவர்கள் சிலர் மேக்கப் போடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் மேக்கப் போடாமல் நடிக்க முடியாது என்பதால் அவர் சீரியலை விட்டு விலக முடிவு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.