அட.. உண்மையிலே அவர்தானா இது! அம்மன் வேடத்தில் அனைவரையும் பிரமிக்க வைத்த பிக்பாஸ் நடிகை! பார்த்தா ஷாக்காகிருவீங்க!!



rekha in amman getup photo viral

தமிழ் சினிமாவில் கடலோர கவிதைகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரேகா. அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நாயகியாக வலம் வந்தார். பின்னர் அவர் சின்னத்திரை சீரியலிலும் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ரேகா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் நிகழ்ச்சிக்கு ஏற்ப அவரால் விளையாட முடியாத நிலையில் முதல் ஆளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்தநிலையில் ரேகா தற்போது அம்மன் வேடமணிந்து போட்டோஷூட் நடத்தி அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார். மேலும் அதில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்.  அம்மனை வழிபடுவதோடு, வீடுகளில் வேப்பிலையை பயன்படுத்தி, தொற்றுகளில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.