அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
என்னது.. பாலாவுடன் காதலா? ரசிகரிடம் உண்மையை போட்டுடைத்த குக் வித் கோமாளி பிரபலம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் இரண்டாவது சீசனில் அஸ்வின், ஷகிலா, கனி, பவித்ரா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, தர்ஷா குப்தா உள்ளிட்ட பலரும் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். மேலும் புகழ், பாலா, மணிமேகலை, சிவாங்கி என பலரும் கோமாளிகளாக கலந்து கொண்டனர்.
இதில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்தவர் ரித்திகா. இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூன்று வாரத்திலேயே எலிமினேட் ஆனார். இதற்கிடையில் இரு சுற்றுகளில் பாலா மற்றும் ரித்திகா இணைந்ததால் அவர்களது ஜோடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அண்மையில் ரித்திகா நேரலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அப்பொழுது ரசிகர் ஒருவர் பாலாவைக் காதலிக்கிறீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு ரித்திகா, பாலா எனது நல்ல நண்பர். திரையில் வரும் ஒவ்வொன்றும் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகதான். டிவியில் வருவதை வெறும் நிகழ்ச்சியாக மட்டும் பாருங்கள்.வாழ்க்கைக்குள் கொண்டு வராதீர்கள். அதுதான் நல்லது என்று கூறியுள்ளார்.