அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
சூப்பர் சிங்கர் நடுவர்களுடன் அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ரித்திகா... வைரலாகும் வீடியோ!!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா. அதனை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் சீரியலை தாண்டி குக் வித் கோமாளி சீசன் 2, நிகழ்ச்சியில் கலந்து கெண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சூப்பர் சிங்கர் நடுவர்கள் மற்றும் போட்டியாளர்களுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.