அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
கல்யாண உடையில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ள இறுதிச்சுற்று நடிகை ரித்திகா சிங்! தீயாய் பரவும் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் நடிகர் மாதவனுடன் இணைந்து இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங். இவர் இந்த படத்தில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். ஆனால் உண்மையில் அவர் ஒரு குத்துச்சண்டை வீரர் தான்.
மேலும் இவர் நடித்த முதல் படத்தின் மூலமே தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது அரவிந்த் சாமிக்கு ஜோடியாக வணங்கா முடி படத்தில் நடித்து வருகிறார். மேலும் அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஓ மை கடவுளே படத்திற்காக திருமண உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.