அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு கடுப்பான நடிகை ரித்திகா சிங்.! என்ன நடந்தது தெரியுமா.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ரித்திகா சிங். இவர் மாதவன் நடிப்பில் வெளியான 'இறுதிசுற்று' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே பெரிதும் ரசிகர்களால் பேசப்பட்டு இவரது நடிப்பிற்கு பாராட்டை பெற்று தந்தது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான 'ஓ மை மை கடவுளே' திரைப்படம் வெற்றி அடைந்தாலும், தமிழில் பெரிதும் இவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இருந்தபோதிலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைகதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து தெலுங்கில் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் ரித்திகா சிங், தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பபடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் தெலுங்கு படத்தின் ப்ரோமோஷனிற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரித்திகா சிங்கிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், "ஏன் தெலுங்கு படங்களில் அதிகமாக நடிக்கிறீர்கள். தமிழில் பட வாய்ப்புகள் இல்லையா" என்று அனைவரின் முன்பும் கேட்டதால் கோபம் அடைந்தார். மேலும் அவர் "எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் எனக்கு மன பூர்வமாக பிடித்து இருந்தால் மட்டுமே நடிப்பேன். பட வாய்ப்புகள் வந்து கொண்டே தான் இருக்கிறது" என்று கடுப்புடன் பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.