#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓ.. சொல்றியா மாமா.! அரங்கத்தையே மிரள வைத்து ரேஷ்மாவுடன் கலக்கல் ஆட்டம் போட்ட ரோபோ ஷங்கர்! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ரேஷ்மா. இவர் இதற்கு முன்பு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பரிச்சயமானவர்.
மேலும் சின்னத்திரையிலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ள அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் விஜய் டிவியில் விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. அப்பொழுது விருது பெற்ற ரேஷ்மா பேசுகையில், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்தபோது ரோபோ சங்கர் மீது கிரஷ் ஏற்பட்டதாக கிண்டலாக கூறியுள்ளார்.
அப்பொழுது தொகுப்பாளர்களான பிரியங்கா மற்றும் மாகாபா ரோபோ சங்கரை மேடைக்கு அழைத்து டான்ஸ் ஆட கூறியுள்ளனர். பின்னர் ஓ.. சொல்றியா மாமா பாடலுக்கு இருவரும் குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.