வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
சேலையை ஏத்தி சொருகி, என்னம்மா விளையாடுறாங்க!! வைரலாகும் நடிகை ரோஜாவின் கபடி ஆட்டம்!!
தமிழ் சினிமாவில் செம்பருத்தி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதனை தொடர்ந்து அவர் பலமுன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்த உழைப்பாளி, அதிரடி படை, சூரியன், வீரா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
90ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக, கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தனர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இந்நிலையில் நடிகை ரோஜா ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அரசியலில் களமிறங்கிய அவர் தற்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்நிலையில் நகரி தொகுதியில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. அதனை தொடங்கி வைத்த நடிகை ரோஜா மைதானத்தில் இறங்கி இளைஞர்களுடன் கபடி விளையாடியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.