#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவி விருப்பத்துடன், மகன் விஜய் கண்முன்னே நடந்த இரண்டாவது திருமணம்! எஸ்.ஏ.சந்திரசேகர் உடைத்த சீக்ரெட்!!
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஏ சந்திரசேகர். இவர் முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, தளபதியாக கொடிகட்டி பறக்கும் விஜய்யின் தந்தையாவார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ என்ற யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் அவர் தனது வாழ்க்கை குறித்தும், சினிமா பயணம் குறித்தும் பல தகவல்களை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அவர் அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோவில், தனக்கு மகன் விஜய் சாட்சியாக இரண்டாவது முறையாக திருமணம் நடைபெற்றது குறித்து கூறியுள்ளார்.
அதில் அவர், நான் கிறித்துவன். ஷோபா இந்து. நடிகர் திலகம் சிவாஜினியின் துணைவியார் தாலி எடுத்துகொடுத்து எங்களது திருமணம் நடைபெற்றது. ஒருநாள் ஷோபா தன்னிடம் நாம் இருவரும் வெவ்வேறு படகில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். இதில் பெரிய அலையோ, சுழற்சியோ வந்தால் இருவரும் ஒரே இடத்தில் கரை ஒதுங்க முடியாது.
நாம் ஒரே படகில் சேர்ந்து செல்ல வேண்டுமென்றால், நாம் இரண்டாவது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்வோம் எனக் கூறினார். அப்பொழுது விஜய்க்கு 6 வயது. அவர் சாட்சியாக இருவரும் மீண்டும் இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டோம் என கூறியுள்ளார்.