#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவியின் ஆசைக்காக 2வது திருமணம் செய்து கொண்ட எஸ்.ஏ. சந்திரசேகர்.!
தமிழ் திரை துறையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துவரும் தளபதி விஜயின் தந்தையும், பிரபலமான இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களை புரட்சி இயக்குனர் என்றும் ரசிகர்கள் அன்போடு அழைப்பதுண்டு. இவர் கடந்த 1973 ஆம் வருடம் ஷோபாவை இந்து முறைப்படி திருமணம் செய்தார். இதன் பிறகு கடந்த 1974 ஆம் வருடம் சந்திரசேகர் ஷோபா தம்பதிகளுக்கு மகனாக விஜய் பிறந்தார்.
விஜயின் தாய் ஷோபா இந்து மதத்தைச் சேர்ந்தவர். அதேபோல தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்த பின்னர் மறுபடியும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று எஸ். ஏ சந்திரசேகரிடம் அவருடைய மனைவி ஷோபா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நடிகர் விஜய்க்கு 6 வயது இருந்தபோது எஸ்.ஏ சந்திரசேகர், சோபா உள்ளிட்ட இருவரும் கிறிஸ்துவ முறைப்படி மீண்டும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் தன்னுடைய யூடியூப் சேனலில் தெரிவித்திருக்கிறார்.