#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது.. நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு கல்யாணமாகிருச்சா! அந்த புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதற்குமுன் அவர் தமிழில் ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் அண்மையில் கூட அவர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அடுத்தாக நடிகை சாக்ஷி அகர்வால் புரவி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது மிகவும் கிளாமரான மற்றும் விதவிதமான போட்டோசூட் புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்த நிலையில் அவர் தற்போது பட்டுப்புடவையில் மணக்கோலத்தில் மற்றும் கழுத்தில் புது தாலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? மாப்பிள்ளை யாரு? என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.