#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதல்ல அதை நிறுத்துங்க.! அந்த உடைக்கு குவிந்த ஆபாச விமர்சனம்! கடுப்பாகி சமந்தா கொடுத்த பதிலடி!!
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அண்மையில் அவர் படு கவர்ச்சியான பச்சை நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அது வைரலான நிலையில் அதற்கு நெட்டிசன்கள் பலரும் மோசமாக, ஆபாசமாக விமர்சனம் செய்துள்ளனர். இந்த நிலையில் ஆவேசமான சமந்தா அதற்கு பதிலளிக்கும் வகையில், முதலில் பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடை போடுவதை அனைவரும் நிறுத்த வேண்டும்.
ஒரு பெண் அணிந்திருக்கும் உடை, இனம், கல்வி, சமூகம், தோற்றம் ஆகியவற்றை வைத்தும் மிக எளிதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாம் 2022ஆம் ஆண்டில் இருக்கிறோம். ஒரு பெண்ணை அவருடைய உடையை மட்டும் வைத்து மதிப்பீடு செய்வதை நிறுத்திவிட்டு நம்மை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாமே! ஒருவரை பற்றி புரிந்து கொள்ளும் முறையை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.
நமது கொள்கைகளை மற்றொருவர் மீது சுமத்துவதால் எந்தவித நன்மையும் கிடையாது என தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.