#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல இளம் நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! அட.. யார்னு பார்த்தீர்களா! ரொமான்ஸில் பின்னுவாரே!!
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென ஹீரோக்களுக்கு இணையாக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கியூட் ஜோடியாக வலம் வந்த அவர்கள் இருவரும் சில காலங்களுக்கு முன்பு கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து சமந்தா படங்கள், சுற்றுலா செல்வது என பிஸியாக இருந்து வருகிறார்.
அவர் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தற்போது சமந்தாவின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை சமந்தா பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு முழுவதும் காஷ்மீரில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.