#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கேன்சரால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடும் பிரபல நடிகை! உருக்கமாக உதவி கேட்ட சனம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் மாடல் சனம் ஷெட்டி. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சனம் தனது சக போட்டியாளர்களிடம் மனதில் பட்டதையெல்லாம் நேரடியாக பேசினார். மேலும் இதனாலேயே பிக்பாஸ் வீட்டில் வாக்குவாதங்களும் உருவானது. ஆனாலும் அவருக்கு பலரும் ஆதரவாக இருந்தனர். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர்களும் உருவாகினர்.
சனம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போது அதனை ஏற்க மறுத்த ரசிகர்கள் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கினர். பின்னர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சனம் தொடர்ந்து ஏராளமான நல்ல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் அங்காடி தெரு நடிகை சிந்துவிற்காக உதவி கேட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் நடிகை சிந்து முதல் சர்ஜரிக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.. ஆனால் தற்போது கேன்சர் அதிகளவில் பரவி விட்டது. அவர் உடனடியாக அடுத்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு 1.6 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது முடிந்தவரை உதவுங்கள் என பதிவிட்டு நடிகை சிந்துவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.