தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
ஏன் இதெல்லாம்.! சூர்யாவுடன் சனம் ஷெட்டி வெளியிட்ட புகைப்படம்! கிண்டல் செய்தவருக்கு சராமரி பதிலடி!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு சூர்யாவின் 40வது படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனை தொடர்ந்து மாலை அவரது 39 வது படமான ஜெய்பீம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறினர். இந்நிலையில் பிக்பாஸ் பிரபலமான சனம் ஷெட்டியும் தனது ட்விட்டர் பக்கத்தில், சூர்யாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன் ஒருவர் சனத்தை விட சூர்யா குள்ளமாக இருப்பதாக கேலி செய்துள்ளார்.
Iniki Surya sir Bday kondaatam naal.. sandai vendaame !
— Sanam Shetty (@ungalsanam) July 23, 2021
I respect all true talents and all true fans ❤️❤️❤️❤️
Fans fights edhuku brothers?!
Anbudan #ungalsanam 🙏#HBDSuriya #gnfam https://t.co/LgbHTkEL8Z
இதற்கு பதிலளிக்கும் வகையில் சனம், ஹைட்டில் என்ன இருக்கு பிரதர்.. அவங்க திறமைதான் வெயிட் என கூறியிருந்தார். இந்நிலையில் சூர்யா ரசிகர்களும் அந்த நபருக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் இணையத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையில், சனம் ஷெட்டி, இன்று சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம் நாள். சண்டை வேண்டாமே! நான் அனைவரோட திறமையும், அனைத்து ரசிகர்ளையும் மதிக்கிறேன். பேன்ஸ் சண்டை எதுக்கு பிரதர்ஸ் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.