Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
அடேங்கப்பா.. வெளியீடுக்கு முன்பே ரூ.100 கோடி வசூல் செய்த புஷ்பா 2; மாபெரும் சாதனை.!
சுகுமார் இயக்கத்தில், கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா (Pushpa The Rise). இப்படத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில், சுனில், ராவோ ரமேஷ், மீம் கோபி உட்பட பலரும் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்று இருந்த ஊ சொல்றியா மாமா, என் சாமி, ஸ்ரீவள்ளி ஆகிய பாடல்கள் பலரையும் ரசிக்க வைத்தன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார்.
டிசம்பர் 05, 2024 அன்று படம் வெளியீடு
தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் நடைபெறும் செம்மரக் கடத்தல், அதன் பின்னணியில் உள்ள அரசியல், கேங்ஸ்டரிசம் போன்ற கதையம்சத்துடன் வெளியாகி இருந்த புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. வசூலையும் வாரிக்குவித்தது. அதனைத்தொடர்ந்து, அதன் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகமும் படம்பிடிக்கப்பட்டு வந்தது. கடந்த சுதந்திர தினம் அன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், பணிகள் தாமதம் காரணமாக படம் 5 டிசம்பர் 2024 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: Pushpa 2 Trailer: புஷ்பா 2 படத்தின் அசத்தல் ட்ரைலர் வெளியானது; லிங்க் உள்ளே.!
இன்னும் 2 நாட்களில் படம் வெளியாகிறது
சமீபத்தில் படத்தின் பீலிங்ஸ் உட்பட பல பாடல்கள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இதனிடையே, படம் வெளியாக இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இறுதிக்கட்ட ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பு பெற்றுள்ளன. ரசிகர்களும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் சென்னையை புயல் பாதித்த பின்னர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போதும் அதேபோன்ற சூழ்நிலையில் வெளியாகவுள்ளது.
ரூ.100 கோடி வசூல்
இந்நிலையில், படம் ப்ரீ புக்கிங் முறையில் மட்டும் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இதன் வாயிலாக படம் முதல் நாள் வசூலியே பெரும் தொகையை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா படத்தின் அடுத்த காட்சிகளை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் நிலையில், படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய சாதனையை எட்டிப்பிடிக்கும் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: அப்போ சமந்தா., இப்போ ஸ்ரீலீலா.. ஐட்டம் டான்ஸ்-க்கு குத்தாட்டம் போட ரெடியா?.. புஷ்பா 2 அசத்தல் அப்டேட்.!