Gunaa lives on forever! 33 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள குணா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!



Guna Movie Completed 33 Years 

 

கடந்த 1991ம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில், நடிகர்கள் கமல் ஹாசன், ரேகா, ரோஷினி, ஜனகராஜ், பிரதீப் சக்தி, சேது விநாயகம் உட்பட பலர் நடிக்க உருவாகிய திரைப்படம் குணா. 

இப்படம் ஸ்வாதி சித்ரா இன்டர்நெஷனல் தயாரிப்பில், இளையராஜா இசையில் உருவாகியது. கொடைக்கானலில் உள்ள குகை ஒன்றில் எடுக்கப்பட்ட திரைப்படம், மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

இதையும் படிங்க: அடேங்கப்பா.. வெளியீடுக்கு முன்பே ரூ.100 கோடி வசூல் செய்த புஷ்பா 2; மாபெரும் சாதனை.!

குணா திரைப்படம் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவுபெறவுள்ளன.

இப்படத்திற்கு பின்னர் அக்குகைக்கு குணா குகை என்ற பெயரும் உண்டாகியது. படம் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது. கடந்த 5 டிசம்பர் 1991 அன்று படம் வெளியாகி இருந்தது.

இன்று வரை கமல் ஹாசனின் திரைப்படங்களில், மிகப்பெரிய கவனத்தை பெற்ற திரைப்படமாகவும் குணா குகை இருக்கிறது. இதனை வைத்து மஞ்சும்மேல் பாய்ஸ் என்ற படமும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: சீரியல் நடிகை தற்கொலை செய்த விவகாரம்; கைப்பற்றப்பட்ட கடிதம் - அதிர்ச்சி தகவல்.!