தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
#Breaking: கஞ்சா கும்பலுடன் தொடர்பு? நடிகர் மன்சூர் அலிகானின் மகனிடம் விசாரணை.!
தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவேன் என அரசியலில் களமிறங்கிய நடிகரின் மகனிடம் அதிகாரிகள் கஞ்சா கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா? என விசாரணை நடத்தும் சம்பவம் நடந்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் மன்சூர் அலிகான், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஆவார். இவரின் மகன் துக்ளக் சிறிய அளவிலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
துக்ளக்கிடம் விசாரணை
இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்யும் நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகானிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாட்டில் ராதா படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் நாளை வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!
விசாரணை முன்னெடுப்பு
விசாரணைக்கு பின்னரே அவர் கைது செய்யப்படலாம் அல்லது சந்தேக வளையத்திற்குள் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை திருமங்கலம் காவல்துறையினர் இதுதொடர்பான விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர்.
இந்த தகவல் திரை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதலிரவுல பல்லாங்குழி விளையாடுவாயா? வரவேற்பை பெரும் SSHHH வெப் சீரிஸ்.!