#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனது புதிய காதலர் குறித்து பிக்பாஸ் வீட்டிலேயே பேசியுள்ள சனம்! இதை பார்த்தீர்களா!! தீயாய் பரவும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 ல் 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் சனம் ஷெட்டி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது மனதில் பட்டதையெல்லாம் நேர்மையாகவும் தைரியமாகவும் பேசினார். இதனால் அவர் சிலரது எதிர்ப்பை பெற்றாலும், பல சமயங்களில் அனைவராலும் பாராட்டப்பட்டார்.
பிக்பாஸ் மூலம் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர் கூட்டமும் உருவானது. சனம் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான தர்ஷனை காதலித்ததாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் பிரச்சினை ஏற்பட்டு திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும் இருவரும் போலீசில் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் காதலர் தினத்தன்று நபர் ஒருவரின் கையைப் பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, என் உலகத்தை ஒளிரவைத்தாய் மோனி.... காதலர் தின டின்னருக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மோனி யார் என்ற ஆர்வம் எழுந்தது. ஆனால் அவரை குறித்து சனம் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தெரிவித்துள்ளார்.
#Sanam#MakkalNayagiSanam
— SanamShettyArmyy (@Vidhyalakshmi_) February 15, 2021
Lucky Mone ❤ Life becomes beautiful when u fall in love... @SamSanamShetty1 ❤ pic.twitter.com/oe4FtXswPS
அப்பொழுது சனம் மோனி தனது கடினமான காலங்களில் தன்னுடன் இருந்ததாகவும், அவர் என்னுடைய நல்ல நண்பர் தான். ஆனால், அதை விட முக்கியமானவர் என கூறியிருந்தார். மேலும் பிறந்தநாளன்று கூட பிக்பாஸ் வீட்டிற்கு மோனி வாழ்த்து அட்டை ஒன்றை அனுப்பியநிலையில் சனம் மகிழ்ச்சியுடன் தனது காதலை கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.