#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமையே! விஜய் சேதுபதி படத்திற்கு இப்படியொரு சோதனையா! அதிரடி உத்தரவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. அவர் குறுகிய காலத்தில் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமாகி தனக்கென ஒரு மாபெரும் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
இந்நிலையில் விஜயா ப்ரொடக்ஷன் தயாரிப்பில், விஜய் சந்தர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத்தமிழன்.இந்த திரைப்படத்தில் ராஸி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை விநியோகிக்கும் உரிமையை லிப்ரா நிறுவனம் பெற்றது.
இந்நிலையில் இந்த திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் நெல்லையில் மட்டும் நவம்பர் 21ஆம் தேதி வரை சங்கத்தமிழன் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது லிப்ரா நிறுவனம் விக்னேஷ் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் 15 லட்சத்தை கடனாக பெற்றுள்ளது.
மேலும் அதனை திருப்பி வழங்காத நிலையில் விக்னேஷ் பிக்சர்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அதனை தொடர்ந்து மாவட்ட நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை மேற் கொண்டதைத் தொடர்ந்து படத்தை நாளை வெளியிட தடைவிதித்து உத்தரவை பிறப்பித்துள்ளது.