#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. மாஸ்டர் JD விஜய்யின் செல்ல பூனை இப்போ பத்திரமா இந்த நடிகர்கிட்டதான் இருக்கா!! வைரலாகும் புகைப்படம்!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் ஜனவரி 14 வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது .இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், மகேந்திரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மேலும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பூனை ஒன்றும் இருந்தது. அந்த பூனை இப்படத்தில் JDயாக நடிக்கும் விஜய்யுடன் இருக்கும். அந்த பூனை இருக்கும் வரை விஜய் குடித்துக்கொண்டு எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பார். பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவர்கள் இருவர் இறந்தபின்பு அவர்களை பார்க்க அங்கு செல்லும்போது அந்தப் பூனை JDயிடமிருந்து சென்றுவிடும். பின்னரே JD விஜய் நல்ல மனிதராக மாறுவார்.
ஆனால் அதற்குப் பிறகு அந்த பூனையை படத்தில் காண்பிக்க மாட்டார்கள்.
இந்த நிலையில் படம் பார்த்த பலரும் அந்தப் பூனைக்கு என்னாச்சு? ஏன் அதன்பிறகு காண்பிக்கவில்லை என கேட்டிருந்தனர். இந்நிலையில் அந்தப் பூனை தற்போது சஞ்சீவ் வீட்டில்தான் உள்ளது. அத்தகைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகர் சஞ்சீவ் JD பூனை பாதுகாப்பாக உள்ளது என கூறியுள்ளார்.