#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆடம்பரமின்றி நடைப்பெற்ற கலக்கப்போவது யாரு புகழ் சரத்தின் நிச்சயதார்த்தம்! வைரலாகும் மணபெண்ணின் புகைப்படம்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சரத். இவரும் தீனாவும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களால் மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது.
மேலும் இவர் பார்ப்பதற்கு நடிகர் மொட்டை ராஜேந்திரன் போலவே இருப்பதால் அவரை போலவே பேசுவது, மொட்டை அடித்து கொள்வது என்று காமெடியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஆனால் இவர் அதற்கு முன்பு அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்துள்ளார்.
ஆனால் அந்த சீரியலின் மூலம் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானவர். இந்நிலையில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி இவரின் நிச்சயதார்த்தம் ஆடம்பரமின்றி நடைப்பெற்றுள்ளது.
இதற்கு பிறகு தான் இருவரும் காதலித்து திருமணம் செய்ய உள்ளனர். ஆனால் இவர்களின் திருமணம் எப்போது என்ற தகவல் வெளியாகவில்லை.