"காவிரி நீரை பெற்றுத்தர வேண்டியது அரசு தான்! நடிகர்கள் இல்லை!" சரத்குமார் காட்டம்!



Sarath kumar controversy speech

தமிழ்த் திரைப்பட நடிகரான சரத் குமார், 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். புலன் விசாரணை, சேரன் பாண்டியன், நட்புக்காக, சூரிய வம்சம், நாட்டாமை, நேதாஜி, கம்பீரம், ரகசிய போலீஸ், சாணக்கியா, காஞ்சனா, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Sarath

சிறந்த நடிகருக்கான பல்வேறு விருதுகளை வென்றுள்ள சரத் குமார், 2001ம் ஆண்டு நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து இவர் 2007ம் ஆண்டு "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி" என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்.

இந்நிலையில், திருச்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த சரத்குமார், அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கர்நாடக அரசு தொடர்ந்து காவிரி நீரை தமிழகத்திற்கு தராமல் புறக்கணித்து வருவது குறித்து பேசினார்.

Sarath

அதில் அவர், " காவிரிப் பிரச்சினையில் நடிகர்கள் குரல் கொடுக்க அவசியமில்லை. காவிரி நீரைப் பெற்றுத் தரவேண்டியது அரசின் கடமை. கர்நாடக நடிகர்கள் காவிரிக்காக குரல் கொடுக்கின்றனர். அதற்காக எல்லா நடிகர்களும் போராட வேண்டும் என்பது சரியல்ல" என்று சரத் குமார் கூறியுள்ளார்.