#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அப்போ கன்ஃபார்ம் 'லியோ' படமும் எல்.சி.யு தான்"! மைனா நந்தினியின் உற்சாக ட்வீட்!
மைனா நந்தினி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிரபலமானவரும் தமிழ் திரைப்பட நடிகையாவார். இவர் அரண்மனை திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் மைனாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர். சரவணன் மீனாட்சி தொடரின் சீசன் 2வில் மைனா ரேவதியாக சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர். சின்னத்தம்பி தொடரிலும் அலப்பறை மைனாவாக கலக்கி வந்தவர். 2022 ஆம் ஆண்டின் பிக் பாஸ் சீசனில் மூன்றாவது இடத்தை பிடித்தவர்.
இவர் சின்னத்திரை மட்டுமல்லாது தமிழ் சினிமாவிலும் வெண்ணிலா கபடி குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3 அரண்மனை 3 மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ திரைப்படத்திற்கு ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே செல்கிறது. அந்தத் திரைப்படத்தை பற்றிய புதிய அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. அப்படியான ஒரு அப்டேட் தான் தற்போதைய வெளியாகியிருக்கிறது.
Very very proud of you to part of #Leo Thanks @actorvijay sir.😍🙏
— Nandhini Myna (@Actormynanandhu) April 6, 2023
i am very blessed and lucky work Thanks to Director @Dir_Lokesh sir 😍❤️ 🤜🤛 pic.twitter.com/3BYxnmwsJt
தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் மைனா நந்தினி லியோ பட குழுவில் இணைந்ததை பெருமையாக கருதுகிறேன். நன்றிகள் விஜய் சார் என தளபதி விஜயை டேக் இருக்கிறார். மேலும் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தான் மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவின் மூலம் மைனா நந்தினி லியோ பட குழுவில் இணைந்திருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.