வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
ரஜினி கையிலிருக்கும் இந்த குழந்தை பிரபல சீரியல் நடிகையா?! யார் தெரியுமா.?
கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் "படையப்பா". படத்தில் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர், அப்பாஸ், ப்ரீத்தா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் ரம்யா கிருஷ்ணன் இதில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார்.
பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் ரஜினிக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கே.எஸ் ரவிக்குமார் ரஜினியை வைத்து "லிங்கா" படத்தை இயக்கினார்.
இந்த இரண்டு படங்களைத் தவிர வேறு படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், படையப்பா படத்தில் இடம்பெற்ற "என் பேரு படையப்பா" என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.
அதில் "நான் மீசை வெச்ச குழந்தையப்பா" என்ற வரிகள் வரும்போது ஒரு குழந்தையின் முகம் காட்டப்படும். தற்போது அந்த குழந்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது சீரியலில் நடித்து வரும் ஹேமா பிந்து என்ற நடிகை தான் அந்த குழந்தை என்ற தகவல் வெளியாகி ஆச்சர்யப்படுத்தியுள்ளது.