#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
44 வயதில் இந்த சீனியர் நடிகையும் செய்யும் வேலையை பாத்திங்களா..? இளம் நடிகைகளே தோத்துருவாங்க போல.! வைரல் புகைப்படம்.!
ஊரடங்கு அறிவித்ததில் இருந்து அவ்வப்போது வித்தியாசமான வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகிவருகிறார் நடிகை பிரகதி. தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் தற்போது சீரியலில் பிரபாலமாக உள்ளார்.
குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அரண்மனைக்கிளி தொடரில் ஹீரோவுக்கு அம்மாவாக, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் பிரகதி. தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர் நடிகைகள் தங்களது வீட்டிலேயே இருந்து தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தங்களது ரசிகர்களுக்காக பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரகதி சில வாரங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு இடுப்புக்கு மேல் வேஷ்டியை தூக்கி கட்டி, தனது மகனுடன் குத்தாட்டம் போட்டிருந்த வீடியோ வைரல் ஆனது.
தற்போது உடம்பை வளைத்து தனது இடது காலை தூக்கி அதை இடது கையால் பிடித்து யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இந்த வயதிலும் எப்படி இப்படியெல்லாம் என கமெண்ட் செய்துவருகின்றனர்.