#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நட்சத்திர விடுதியில் கும்மாளம், காலையில் செல்போன் மாயம்; ஷாலு ஷம்முவின் பரபரப்பு புகார்.!
தமிழில் சிவகார்த்திகேயன், சூரி கூட்டணியில் உருவாகி தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் உட்பட பலரும் நடித்திருந்தனர்.
இதில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தோழியாக கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு. இவர் சென்னை புரசைவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார்.
கடந்த 9-ஆம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் இருக்கும் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர், சூளைமேட்டில் இருக்கும் தோழி வீட்டுக்கு இரவு சென்று அங்கு தங்கியுள்ளார்.
பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது இரண்டு லட்சம் மதிப்புள்ள ஐபோன் தொலைந்து விட்ட நிலையில், இது குறித்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.