#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான் அப்பவே எவ்வளவோ கெஞ்சியும் கேட்கலையே! சித்ரா தற்கொலை குறித்து நடிகை ஷாலு ஷம்மு கண்ணீருடன் வெளியிட்ட ஷாக் பதிவு!
பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சித்ரா. அதனை தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் சித்ராவிற்கு கடந்த மாதம் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் இருவருக்கும் ஏற்கனவே அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சற்றும் எதிர்பாராதவிதமாக ஷூட்டிங்கிற்கு சென்ற இடத்தில் சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் வேதனையுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சித்ராவிற்கு நெருக்கமான நடிகையான ஷாலு ஷம்மு, தனது இன்ஸ்டாகிராமில், உன்னை இப்படி இழந்துவிடுவேன் என தெரியாது பேபி. கடைசியாக நான் உன்னிடம் போன் பேசிய போது கூட ஒவ்வொரு நொடியும் நீ ஒரு தவறான வாழ்க்கை துணையை தேர்வு செய்து விட கூடாது என்பதற்காக கெஞ்சினேன். ஆனால் நீ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இப்படியொரு முடிவை நீ எடுப்பாய் என தெரிந்திருந்தால் உன்னை கெஞ்சுவதோடு விட்டிருக்கமாட்டேன் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.