"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
ப்பா... வேற லெவல் போங்க... ரிலீஸ்க்கு முன்பே 26 கோடி வசூல் சாதனை படைத்த சிம்பு படம்...
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இன்றைய இளைஞர்களின் மத்தியில் சிம்புவின் நடிப்பிற்கும், நடனத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பும், வரவேற்கும் உள்ளது. சிம்பு தனக்கென்று வைத்திருக்கும் தனி ஸ்டைல் மூலம் இன்றைய இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.
நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "பத்து தல". இப்படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான முப்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். மேலும் இப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். படத்தில் சிம்புவுடன் 2-வது ஹீரோவாக கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த அமேசான் நிறுவனம் சுமார் 26 கோடிக்கு இந்த உரிமையை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.